இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் !!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்தார். இந்த விடயம் இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.
இழப்பீடு தொகை குறித்து பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.