மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.