கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்!

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்டவேளை அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மரப்பெட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும். குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது …

அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்