இலங்கை – அயர்லாந்து போட்டிக்கு மழையால் பாதிப்பு!

இலங்கை – அயர்லாந்து போட்டிக்கு மழையால் பாதிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.

ஆட்டம் நிறுத்தப்படும் போது இலங்கை அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டி இடைநிறுத்தப்படும் போது துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க 149 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.