அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு : ராஜித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு : ராஜித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2014 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கை ஜூன் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.