கருமலையூற்று மீனவர் பிரச்சினை ;  விமானப்படைத் தளபதியுடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

கருமலையூற்று மீனவர் பிரச்சினை ; விமானப்படைத் தளபதியுடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களர்களது இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த அனுமதியை மீண்டும் பெற்றுகொள்வது தொடர்பான கலந்துரையாடல் விமானப்படைத் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கும் விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலாளர்கள் தமது மீனவத்தொழிலை நீண்டகாலமாக செய்து வந்ததாகவும் தற்பொழுது விமானப்படையினாரால் இடைநிறுத்திவைக்கப்பட்டிருப்பது நியாயமற்ற விடயம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை பற்றி மிக விரிவான விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இதன்போது எடுத்துரைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில், மிக விரிவாக ஆராயப்பட்டதுடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாகவும் விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன அவர்கள் உறுதியளித்துள்ளார்.

(எஸ் சினீஸ் கான்)