அமைச்சர் நசீர் அகமட்டின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்க கோரி கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை (28) 15 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லடியுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணிமனைக்கு முன்னால் அமைச்சரின் உருவப் பொம்மை எரித்து மண் ஏற்றும் கனரக வாகனங்களுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக மாவட்ட செயலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் மண் அகழ்வுக்காக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணிமனையினால் வழங்கப்பட்ட மண் அகழ்வுக்கான அனுமதிபத்திரங்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் ஆர்பாட்த்திற்கு அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து கல்லடியிலுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணிமனைக்கு முன்னால் சட்டரீதியாக மண் அகழ்வில் ஈடுபடுவர்கள் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் தமது கனரக வாகனங்களுடன் இன்று காலை 8 மணிக்கு ஒன்று திரண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.