முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோழி மற்றும் முட்டைத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை எடுத்தால் 15 நாட்களுக்குள் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்பிப்பது குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.