துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லுனுகம்வெஹர குடா கம்மான 01, ஸ்பீல்யாய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடா கம்மான 01 ஸ்பீல்யாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த நபரை ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை லுனுகம்வெஹர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்