இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மலைகள், சரிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.