இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்!

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) இலங்கையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது..

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் இந்த சாகச விளையாட்டு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தனர்.

கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

இந்த செயற்திட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும் அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.