நான் மீண்டும் கைதானாலும் அமைதியைப் பேணுங்கள்: இம்ரான் கான்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தான் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் தனது ஆதரவாளர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதர் இம்ரான் கான் கோரியுள்ளார். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, இஸ்லாமாபாத்திலுள்ள பொறுப்புடைமை நீதிமன்றத்தில் இன்று (23) இம்ரான் கான் ஆஜராகவுள்ளார்.
இந்நிலையில், அனைத்து வழக்குகளில் தான் முன்பிணை பெற்றுள்ள போதிலும் தான் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளார்.
அதேவேளை, தான் கைது செய்யப்பட்டாலும் அமைதியை கடைபிடிக்குமாறு இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். எனினும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அடிப்படை உரிமை எனவும் அவர் கூறியுள்ளார்.