ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
எதிர்வரும் ஜூலை 01 முதல் அமுலாகும் வகையில், இலங்கையிலுள்ள தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் நுழைவுக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.
இலங்கையர்களுக்கு
- வளர்ந்தவர்கள்: ரூ. 100 இலிருந்து ரூ. 200 ஆக அதிகரிப்பு
- பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள்: ரூ. 20 இலிருந்து ரூ. 30 ஆக அதிகரிப்பு
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: ரூ. 20 இலிருந்து ரூ. 50 ஆக அதிகரிப்பு
வெளிநாட்டவர்களுக்கு
- வளர்ந்தவர்கள்: ரூ. 2,000 இலிருந்து ரூ. 3,000 ஆக அதிகரிப்பு
- சிறுவர்கள்: ரூ. 1,000 இலிருந்து ரூ. 1,500 ஆக அதிகரிப்பு
- பாடசாலை மற்றும் பல்கலை மாணவர்கள்: ரூ. 1,200 இலிருந்து ரூ. 2,000 ஆக அதிகரிப்பு