அரசியல் சூதாட்டத்தினை நிறுத்த வேண்டும்!- சாரதி ஹேரத்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.இது அரசியல் சூதாட்டம் எனவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று (23ம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரதான வாதம் அவர் அமைச்சரவைக்கும் அமைச்சருக்கும் கீழ்ப்படியாதவர் என்பதுதான். சுயாதீன ஆணைக்குழுவின் பங்கு அமைச்சரவைக்கு அங்கீகாரம் வழங்குவதோ அல்லது அமைச்சரவையின் கீழ் அடிமையாக இருப்பதோ அல்ல.ஒரு சுயாதீன ஆணைக்குழு அதன் வரையறை, அவதானிப்பு மற்றும் முடிவை சமூகத்திற்கு முன்வைக்கலாம்.
மத்திய வங்கியை சுதந்திரமாக ஆக்க வேண்டும் என்று கூக்குரலிடும் தாராளவாத சமூகம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிலும் அதன் சுதந்திரத்திலும் தலையிட வேண்டாம் என்று கூறவில்லை.
கொழும்பு சிவில் சமூகத்தில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. இது ஒரு அரசியல் சூதாட்டம். அதனை நிறுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் பேரவையின் உறுப்பினர் சாரதி ஹேரத் மேலும் தெரிவித்தார்.