ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை வழங்கப்பட்டது..!
குறித்த மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு கடந்த 23ம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 25 மாணவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24ம் திகதியன்று 4 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ம் திகதி வரை விளக்கமரியயலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
அத்துடன் ஏனைய மாணவர்களில் நேற்று 17 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது நேற்று கைது செய்யப்பட்ட 17 பேரையும் பொலிஸார் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் இதுவரைக் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் நீதவான் எஸ்.ஏ.எம்.சீ சதுரசிங்ஹவினால் பினை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சாதாரண தர பரீட்சைகள் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் புத்தளம் பொலிஸ் நிலையத்திகுச் சென்று காலை 8 மணியிலிருந்து12 மணிக்குள் கையொப்பமிடவேண்டுமென்றும் நீதவான் உத்தரவு பிரப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.