எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என்பவர்களுக்கு என்ன நிகழும் தெரியுமா..?
எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே ‘அரகலய’ (போராட்டம்) களம் செயற்பட்டது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச என்ற நாமத்தைச் சிதைப்பதற்கு முற்பட்டனர். அதனால்தான் அவர் விகாரைக்குச் செல்வதைக்கூட நகைச்சுவை விடயமாக மாற்றியமைத்தனர்.
எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என விமர்சிப்பவர்கள், அவர்களின் பெற்றோரையும் ‘கிழட்டு மைனா’ எனக் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என நான் கூறியிருந்தேன். அப்படியான சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதனால்தான் அவ்வாறானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தேன்.
போராட்டக் களத்தில் இலங்கை சிங்கள, பௌத்த நாடு அல்ல என்றார்கள். அநீதிகளைக்கூட நியாயப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் அங்கு இடம்பெற்றன” என கூறியுள்ளார்.