
பொத்துவில் முஹுது மகா விஹாரையின் பிக்கு தாக்கப்பட்டு கொள்ளை: 8 பேர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொத்துவில் முஹுது மகா விஹாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்த குறித்த விஹாரையில் வசித்து வரும் பிக்கு ஒருவரைத் தாக்கி 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றவர்களை பொத்துவில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டுச் சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்களாவர்.
இந்நிலையில் சந்தேக நபர்களால் கொள்ளையிட்படப்ட கைத்தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.