மல்வானையில் கிணற்றில் வீழ்ந்து 3 வயதான சிறுமி உயிரிழப்பு..!

மல்வானையில் கிணற்றில் வீழ்ந்து 3 வயதான சிறுமி உயிரிழப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மல்வானை – வல்கம பிரதேசத்தில் உள்ள  வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கே.பி. திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாய் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.