பணிப்பெண்னை கட்டிவைத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்..!

பணிப்பெண்னை கட்டிவைத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்..!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 61 வயதான கே. அநுர இந்திரகுமார பெர்னாண்டோ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டவராவார்.

வெளியே சென்ற மனைவி பிள்ளைகள்

சம்பவதினம் அவரது மனைவியும் மூன்று மகள்களும் தேவாலயத்தில் இடம்பெற்ற பூஜைக்கு சென்றிருந்ததாகவும் உயிரிழந்தவர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போதே, ஒருவர் வீட்டின் மேல் தளத்துக்குள் புகுந்து பணிப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளைக் நபர் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.

அதன் பின்னர் கீழ் தளத்தில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அதிகாரியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.