ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அனுமதி..!

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அனுமதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு நாளொன்றுக்கு 4 இலட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகளின்படி, திட்ட ஆதரவாளர் செயல்படவில்லை என்ற காரணத்தினால் இந்த உடன்படிக்கையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.