122.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(FASTNEWS|COLOMBO) – யாழ்ப்பாணத்தின் மாதகல்துறை பகுதியில் நேற்று(31) 122.5 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை குறித்து இளவலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.