
சுதந்திர கட்சியின் ரணில் ஆதரவாளர்களுடன் மைத்திரி விசேட கலந்துரையாடல்..!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கும் சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்பு – ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று (16.08.2023) இடம்பெற்றது.
வருட பூர்த்தி கொண்டாட்டம்

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருட பூர்த்தி கொண்டாட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் நாட்டின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.