கொரோனா ஜனாஸாக்களை எரித்தமை பற்றி, ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறீர்கள் இல்லை..?

கொரோனா ஜனாஸாக்களை எரித்தமை பற்றி, ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறீர்கள் இல்லை..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் (WHO) வழிகாட்டல்களை தவிர்த்து, சொந்த முறைகளின் கீழேயே இலங்கை அரசாங்கம் அதைச் செய்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

‘கொரேனா தொற்று காலப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டல்களை தவிர்த்து உங்களின் சொந்த முறைகளின் கீழேயே அதனை செய்துள்ளீர்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளக விசாரணை தொடர்பில் கூறியிருந்தீர்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷவும் இது தொடர்பான பரிசீனை செய்வதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இது தொடர்பான விடயம் வெறுப்புணர்வு குற்றச் செயலாகும். இதற்கு ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோர முடியாது’ என்றார்.

இதன்போது பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ‘நிபுணர்கள் குழுவின் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கின்றேன். உங்களின் வேண்டுகோள் தொடர்பில் அந்த குழுவின் அறிக்கையை முன்வைப்பேன். இதனை உணர்வுபூர்வமான விடயமாக கருதி சட்ட தன்மை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கின்றேன்’ என்றார்.