சதொச முட்டையினால் உள்ளூர் முட்டையின் விலையும் சரிந்தது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள 24 சதொச கடைகளில் நாளொன்றுக்கு 35 ரூபாவாக விற்பனை செய்யப்படும் முட்டையின் அளவு அதிகரித்துள்ள நிலையில், சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட சதொச முட்டை விற்பனையால், சாதாரண கடைகளில் 60, 70 ரூபாய் என உயர்ந்த விலையில் இருந்த முட்டை விலை, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச கடைகளில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பொது கடைகளிலும் முட்டையின் விலை குறைந்துள்ளதாக சதொச பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.