கட்சி விட்டு கட்சி பாய்பவர்களிடம்  முஸ்லிம் காங்கிரஸை தாரைவார்க்க் முடியாது : பிரதிப்பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான்..!

கட்சி விட்டு கட்சி பாய்பவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸை தாரைவார்க்க் முடியாது : பிரதிப்பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நூருல் ஹுதா உமர்

செப்டம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள மாமனிதர் அஷ்ரப் நினைவு தினம் கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப்பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவு தினத்தை முன்னிட்டு நானும் மத்திய குழுவும் இணைந்து சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானமெடுக்கப்பட்டது.

அதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சி குறித்த விடயங்களில் நடைபெறும் கருத்து வேறுபாடுகள், அநீதிகள் மற்றும் ஏனைய உள்ளூர்ப் பிரச்சனைகள் என சகல விடயங்களையும் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் எடுத்துக்கூறினேன்.

கட்சி விட்டு கட்சி பாய்ந்து இறுதியில் முஸ்லிம் காங்கிரஸூக்குள் வருபவர்களிடம் முழுமையாக கட்சியை தாரைவார்த்துக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது.

அதேநேரம், கட்சியின் கதவு திறந்தே இருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு என்பதையும் தலைவருக்கு எடுத்துக்கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.