சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வௌிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் S.I. இமாம் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி A.C.M. ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ A.J. சோசா ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்