ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!
ஆசியக் கோப்பையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் இலங்கை கேப்டன் தசுன் ஷானகா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா அணிக்கு எதிராக நடந்த, ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.
பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தி முழுபலத்துடன் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓட்டங்களில் சுருண்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.
போட்டி முடிந்ததும், பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷானகா தோல்வி குறித்து விளக்கம் அளித்ததுடன், ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘இது துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், மேகமூட்டமான சூழ்நிலைகள் ஒரு பகுதியாக விளையாடி விட்டது. எங்களுக்கு இது கடினமான நாள்.
ஆனால், கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது எங்களுக்கு தெரியும். நல்ல அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தோம். இது ஒரு பெரிய ஊக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய நல்ல கிரிக்கெட்டை நம் வீரர்கள் தொடர்வார்கள். திரளாக வந்து ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். இன்னும் பாரிய ஆதரவுக்கு நன்றி. மேலும், இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்