மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவுவதே இதற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

அதன் பிரகாரம் அம்பாறை, மொனராகலை, பிபில மற்றும் சீலத்தனை ஆகிய நீர் விநியோக முறைமைகளில் இருந்து கண்காணிப்பு முறைமையின் கீழ் நீர் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.