ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் கூட்டமைப்பு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது என நிமால் லான்சா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நிமால் லான்சாவை நாடாளுமன்றில் சந்தித்து உரையாடிய மொட்டுக் கட்சி எம். பிக்களிடமே நிமால் லான்சா இந்தத் தகவலைக்  கூறியுள்ளார்.

நிமால் லான்சாவின் கூட்டமைப்பானது சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் யாரெல்லாம் அடுத்த அதிபர் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்களோ அவர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.