A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!

A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தற்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை திகதிகள் திருத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, 2023 உயர்தரப் பரீட்சை நவம்பர் 27, 2023 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் 2022 பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் சுமார் 3 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதால் நிலைமையை அமைச்சர் நீண்ட நேரம் விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.