மின்சார சபை – எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 4000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு..!
இலங்கை மின்சார சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்குள் 4000 ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தற்போதும் காணப்படுகின்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களை கொண்டு தற்போது வழங்கப்படும் சேவைகளை முன்னெடுக்கூடியதாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 3292 ஆகவும் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2100 ஆகவும் காணப்படுவதோடு, 1192 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
மின்சார சபைக்காக அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 24000 ஆக காணப்படுகின்ற போதிலும் தற்போதும் 21000 ஊழியர்கள் மாத்திரமே சேவையில் உள்ளனர். அதன்படி அங்கும் 3000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இந்த நிலைமைகளை பயன்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டாமல் நாட்டின் நிலையான அபிவிருத்தியை கருத்தில் கொண்டே தீர்மானங்கள மேற்கொள்கிறோம்.