வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது..!

வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அவதானம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆறுகளில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,களனி ஆற்றின் நீரின் ஓட்டம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அவிசாவளையின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் சில இடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.