
35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருகொடவத்தை இலங்கை சுங்க முனையத்தில் உணவுப் பொதி மற்றும் ஒலிபெருக்கியில் ஒரு தொகுதி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கை சுங்க மற்றும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதி இத்தாலியில் இருந்து விமானம் மூலம் இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தைப் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் விநியோக நிறுவனம் ஒன்றிற்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதியை ஆர்டர் செய்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.