லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபால் அதிகரிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படீ
12.5 கிலோ 343 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா
5 கிலோ 137 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா
2.3 கிலோ 63 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 650 ரூபா
இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு மூவாயிரத்து 127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.