வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி..!

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

இதன் காரணமாக பொதுமக்கள் அசொகரரியங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததன் காரணமாக பலர் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றார்கள்.

வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்

பெரியமுல்லையில் தெனியாய வத்தை, செல்லக்கந்த, கோமஸ் வத்தை, ரப்பர் வத்தை, கட்டுவ பிரதேசத்தில் புவக்வத்தை உட்பட பல இடங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

இதன் காரணமாக சிலர் உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர். தமக்கு அரசாங்கத்தினால் இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

தெனியாய பிரதேசத்தில் இனி பள்ளிவாசல் மூலமாகவும், ஏனைய பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புகள் மூலமாக சமைத்த உணவு வழங்கப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.