ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு..!

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது..

இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக சுற்றாடல் அமைச்சர் பதவி வெற்றிடமானது.

இந்நிலையில் அந்த அமைச்சு பதவி தற்போது ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.