சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது – காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர்..!

சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது – காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கார்டியன்

காசா மருத்துவமனையில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்து சம்பவம் போன்ற ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2007 இல் ஹமாஸ் அமைப்பினர் காசா பள்ளத்தாக்கை கைப்பற்றிய பின்னர் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரே நாளில் மிகஅதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக இது விளங்குகின்றது.

ஹமாசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காசா சுகாதார அமைச்சு 500பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.பப்டிஸ்ட் மருத்துவமனை என அழைக்கப்படும் அல் அஹ்லி அல் அராபியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானதாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக ஹமாஸ் இஸ்ரேலிற்கு இடையிலான 11 நாள் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த இரத்தக்களறி இடம்பெற்றுள்ளது.

இது மத்திய கிழக்கில் வன்முறைகளை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் பின்னர் இஸ்லாமிய ஜிகாத்தின் ரொக்கட்தவறுதலாக வெடித்ததால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

எனினும் அழிவின் அளவு அந்த அமைப்பின் ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது என கருதமுடியாத அளவிற்கு காணப்படுகின்றது.

அல்ஜசீரா வெளியிட்டுள்ள வீடியோக்கள் மருத்துவமனையின் பல மாடிக்கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதை காண்பித்துள்ளன.உடல்கள் பெருமளவு இரத்தம் பெருமளவு இடிபாடுகளை காணமுடிகின்றது.

அங்கிலிகன் தேவாலயத்திற்கு சொந்தமான அந்த மருத்துவமனை முன்கூட்டிய எச்சரிக்கை இன்றியே தாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமையும் இந்த மருத்துவமனை தாக்கப்பட்டது.

இந்த மருத்துமனை காலை 7.30 மணிக்கு தாக்கப்பட்டுள்ளது அவ்வேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டனர்இ மேலும் இஸ்ரேல் தங்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மருத்துவமனை பாதுகாப்பான இடம் என கருதி அங்கு தஞ்சமடைந்த பல பொதுமக்களும் காணப்பட்டனர்.

நாங்கள் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்பாரிய சத்தம் கேட்டது கூரை இடிந்து சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த அறையின் மீது விழத்தொடங்கியது இது படுகொலை என வைத்தியர் ஹசன் அபு சிட்டா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை நோயாளிகள்சுகாதார பணியாளர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள் மீதான இந்த அதிர்ச்சி தரும் தாக்குதலை எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது எனகுறிப்பிட்டுள்ள அவர் மருத்துவமனை ஒரு இலக்கல்ல இந்த இரத்தக்களறி நிறுத்தப்படவேண்டும் போதும் போதும் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 300க்கும் அதிகமானவர்கள் அம்புலன்ஸ் மற்றும் காரில் காசாவின் பிரதான வைத்தியசாலையான அல்ஸிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏனைய காயங்களால் காயமடைந்த பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர்.

காயமடைந்த மக்கள் தரையில் காணப்படுகின்றனர் வலியில் கதறுகின்றனர்.

நாங்கள் ஐந்து கட்டில்களை ஒரு அறைக்குள் புகுத்துவதற்கு முயல்கின்றோம்இஎங்களிற்கு சாதனங்கள் கட்டில்கள் மருந்துகள் வேண்டும் எங்களிற்கு எல்லாம் வேண்டும் என அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சியாட் செகாடா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மணிநேரங்களில் காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கும் என கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதால் இந்த தாக்குதல் மிக மோசமான விடயம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடி பாதுகாப்பான இடம் என தாங்கள் கருதிய இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் – மருத்துவனையில் சர்வதேச சட்டங்களின் கீழ் அது பாதுகாப்பான இடம் எனவும் அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.