
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் சோறு, கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சோறு, கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், மேற்படி விலைகள் உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.