பாராளுமன்ற உறுப்பினர்  சுஜித் பெரேரா தன்னைத் தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவிப்பு..!

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னைத் தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாராளுமன்ற சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.