இரண்டாம் நிலை வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று பாராளுமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது

இரண்டாம் நிலை வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று பாராளுமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் நிலை வாசிப்பு இன்று (23) பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 9.30 இற்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நிலை வாசிப்பு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (21) வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பின் போது வாத பிரதிவாதங்களும் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு இரண்டாம் நிலை வாசிப்பும் வாத பிரதிவாதங்களும் இடம்பெறவுள்ளன

இதனை தொடர்ந்து டிசம்பர் 2 ஆம் திகதி மாலை வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நிலை வாசிப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் பாராளுமன்ற மத்திய செயற்குழுவிற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளன.

அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் நிலை வாசிப்பு முன்னெடுக்கப்பட்டு டிசெம்பர் 19 ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.