இழப்புக்களிலிருந்து மீண்டுள்ள மக்களை பாராட்டுகிறேன் : யாழ். நூலகத்தில் சமந்தா பவர்!

இழப்புக்களிலிருந்து மீண்டுள்ள மக்களை பாராட்டுகிறேன் : யாழ். நூலகத்தில் சமந்தா பவர்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் சமந்தா பவர், யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ். பொது நூலகத்தில் தமிழர் கலாசார முறைப்படி யாழ். பொதுநூலகர் சுகந்தி சதாசிவமுர்த்தி மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

யாழ். பொதுநூலகத்தினை சுற்றிப் பார்வையிட்டவர், பின்னர் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகளையும் பார்வையிட்டார்.

ஆதன் பின்னர், கருத்து தெரிவிக்கையில், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டடது துன்பமான ஒரு விடயம். துமிழ் மக்களின் கலாசாரத்தினை எதிர்காலத்தினை கட்டி எழுப்புவதற்கு கடந்த கால வரலாறுகள் அனைவருக்கும் முக்கியமானது.

ஆதனால் தான் யாழ். நூலகம் எரியூட்டப்பட்டது மிகவும் கடினமான சம்பவம்.யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு முழு உலகமே வருத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்மக்கள் யாழ். நூலகத்தின் ஊடாக தமது கலாசாரத்தினையும், வரலாற்றினையும் இழந்துள்ளார்கள். அந்த அழிவுகளில் இருந்து அபிவிருத்தி அடைந்து வந்தமைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு, எதிர்காலத்தினை நோக்கி பயணிப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தினை அளித்துள்ளமையை எண்ணி பெருமைப்படுகின்றேன் என்றார்.

பொது நூலகம் என்பது படிக்கின்ற மற்றும் வாசிக்கின்ற விடயம் அல்ல, சமூகத்தினைக் கட்டி எழுப்பும் ஒரு நிறுவனம்.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஒவ்வொரு சமூகத்தினரும் கூடி எமது வரலாறு எப்படி இருக்குமென்று புரிந்து கொண்டு எதிர்காலத்தினை மிகவும் திடகாத்திரமாக கட்டி எழுப்புவதற்கு யாழ்.பொது நூலகம் நிச்சயமாக உதவுகின்றது.

200 வருடங்களுக்கு முன்னரான இந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒரு தொகை நிதியினை அன்பளிப்புச் செய்வதாகவும் அவர் கூறினார்.

எமது எதிர்காலச்சந்ததியினர் இந்த ஓலைச் சுவடிகளில் இருந்து படிக்க கூடிய விடயங்கள் இருக்கின்றது என்பதற்காகவே, இந்த ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்திருக்கின்றீர்கள் என்ற உணர்விற்கும் நான் மதிப்பளிக்கின்றேன்.

முழு உலகமுமே இவ்வாறான ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வருகின்றார்கள். தமிழ் மக்களின் வரலாறு முழு சமூகத்திற்குமே முக்கியமானது.

இந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பதற்கான உங்களின் நடவடிக்கைகளுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.