3 நிமிடத்தில் களத்திற்குள் வராததால் வெளியேற்றப்பட்டார் மேத்யூஸ்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பேட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தைத் தாண்டி களத்திற்குள் வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்கப்பட்டார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் ‘Time Out’ அறிவிப்புடன் Run out வீரராக அறிவிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.