தாமதமாகும் இஸ்ரேல் ஹமாசிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான மோதல் இடைநிறுத்தம் தாமதமாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.
ஹமாஸ் வியாழக்கிழமை மோதல் இடைநிறுத்தம் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தது எனினும் இந்த விடயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என இஸ்ரேலிய வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
காசாவில் உள்ள பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என இஸ்ரேலின் தகவல்கள் தெரிவித்துள்ளன.