தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவுஸ்திரேலியா பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு..!

தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவுஸ்திரேலியா பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹாகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அங்கு அரசு தரப்பினால் ஒதுக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இதன்படி தனுஷ்க குணதிலக்கவின் சட்டக் கட்டணத்தை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.