காஸா பள்ளி மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 30 பேர் பலி..!

காஸா பள்ளி மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 30 பேர் பலி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  காஸா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினர், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ரோக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கொன்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.