ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு..!

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு..!

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

“இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும். இந்த முறை போலல்லாமல், இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

பெட்ரோல் இல்லை, எதுவும் இல்லை. அடுத்த முறை ஐ.எம்.எஃப்-க்கு போனால் நிலைமைகள் தெரியும். எனது அடுத்த பயிற்சி புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாகும்.

இந்த நாட்டின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலம் வழங்கப்பட வேண்டும். உங்களுக்காக அல்ல உங்கள் குழந்தைகளுக்காக. அவர்களுக்காக இதைச் செய்வோம்.

எப்படி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி எங்களுடன் இணைவதே அவர்களுக்குச் சொல்கிறேன்.

எங்களிடமிருந்து அனுபவத்தைப் பெறுவதற்கும் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.”