நடுவீதியில் வைத்து நான் கொல்லப்பட்டால், என் மரணத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்..!

நடுவீதியில் வைத்து நான் கொல்லப்பட்டால், என் மரணத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களவெடுப்பவர்களை காட்டிக்கொடுத்தமையால் நடுவீதியில் வைத்து இன்று அல்லது நாளையோ என்னை படுகொலைச் செய்யமுடியும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொ​சான் ரணசிங்க, என்னை படுகொலைச் செய்தால், அதற்கான பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், சாகல ரத்னாயக்கவும் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆகையால், இந்த உரையில் மேற்கூறப்பட்ட விடயத்தை, ஹன்சாட்டில் இருந்து அகற்றவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.