சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(29)காலை காணப்பட்டது.

கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர் வீடு திரும்பவில்லை என்று உறவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இதன் பின்னர் உறவினர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி, குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (41 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.