கிழக்கில் அடைமழை, காத்தான்குடியில் பல வீதிகள் நீரில் மூழ்கின..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – ரீ.எல்.ஜவ்பர்கான் –
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடைவிடாத கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 66.0 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக மாவட்டத்தில் புதிய காத்தான்குடி பகுதியில் நல்ல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் இடம் பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு ஆரையம்பதி கிரான் உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது
நீர் தேங்கியுள்ளதால் பல வீதிகளில் போக்கு வரத்து பாதிக்கப்ட்டுள்ளது. பாரிய இடி மின்னலும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகிறது.