முல்லைத்தீவு மாவட்ட தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..!

முல்லைத்தீவு மாவட்ட தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றான தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் 6′ இருந்து 9′ அளவில் திறக்கப்பட்டுள்ளது.

எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என முல்லைத்தீவு மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாலநாதன் சதீஸ்